அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பொக்லைன்கள் பறிமுதல்

சாயல்குடி, பிப்.13: சாயல்குடி அருகே கடுகுசந்தைசத்திரம் விவசாய நிலங்களில் சவட்டு மண் அள்ள வாங்கிய, அனுமதியை தவறுதலாக பயன்படுத்தி, விதிமுறைகளை மீறி மணல் அள்ளி கடத்தியுள்ளனர். இதுகுறித்து பரமக்குடி சப்.கலெக்டர் விஷ்ணுசந்திரனுக்கு  தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் நேரில் சென்று ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறி மணல் அள்ளிய 5 பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்தார். அப்போது அங்கிருந்த இரண்டு டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது. கடலாடி துணை தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையிலான வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

*முடங்கிய திட்டம் உயிர்பெறுமா?கிலோ ரூ.50க்கு விற்பதால் மகிழ்ச்சிபயன்பாட்டிற்கு வரவில்லைகடந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவைக்காக வறட்சி நிதி, 14வது நிதிகுழு மானிய நிதி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, ஒன்றிய பொது நிதி ஆகியவற்றிலிருந்து சுமார் ரூ.13 கோடி மதிப்பீட்டில் 1153 குடிநீர் திட்டப்பணிகள் மாவட்டம் முழுவதும் துவங்கப்பட்டது. உப்புத் தண்ணீர், தரமற்ற பணிகள், வேலை முடிவுறாமல் கிடப்பில் போடப்பட்டவை என 40 சதவீதத்திற்கு மேலான குடிநீர் திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. அனைத்து கிராமங்களும் பயன்பெறும் வகையில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் சாயல்குடி அருகே குதிரைமொழியில் கடல்நீரை நன்னீராக்கும் பிளான்ட் அமைக்க, கடந்த ஜூன் மாதம் வரைவு திட்டம் தயார் செய்யப்பட்டு, மாநில அரசின் நிதி ஒதுக்கீடுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோன்று பல நூறு கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களை முறையாக செயல்படுத்தினாலே, வறட்சியான மாவட்டத்தை வளமிக்க மாவட்டமாக்கி, குடிநீர் பஞ்சத்தை போக்கலாம்.

Related Stories: