கொய்யாப்பழ தகராறில் டிரைவர் கொலை குற்றவாளிகளை கைது செய்ய கோரி மறியல்

மதுரை, பிப். 13: மதுரையில் டாஸ்மாக் கொய்யாப்பழ தகராறில் டிரைவரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை கொடிக்குளம் பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் சிவா(22). கார் டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர், புதூர் சிவானந்தநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது இவருக்கும், அங்கு மது அருந்திய கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல், சிவாவை தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற சிவா, நண்பர்களுடன் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு வந்து அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வெளியில் இருந்து வந்த மற்றொரு கும்பல் சிவாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவா ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதுகுறித்து புதூர் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘டாஸ்மாக் கடைக்கு வந்த சிவா, அங்கு மது அருந்தி கொண்டிருந்த காமராஜர்புரத்தை சேர்ந்த சிலரிடம் கொய்யா பழத்துண்டு கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் அவர்கள் சிவாவை தாக்கியுள்ளனர். அங்கிருந்து கிளம்பி சென்ற சிவா மீண்டும் டாஸ்மாக்கிற்கு வந்துள்ளார். இதை பார்த்து விட்டு செல்போனில் தகவல் தெரிவித்ததும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் டாஸ்மாக் கடைக்கு வந்த கும்பல் சிவாவை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர் ஒருவரது உத்தரவின் பேரில் கும்பல் வந்து சிவாவை கொலை செய்து விட்டு தப்பியதா உள்ளிட்ட பல்ேவறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.இந்நிலையில் நேற்று அழகர்கோவில் ரோடு ெகாடிக்குளம் விலக்கில், சிவாவின் உறவினர்கள், நண்பர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசத்தை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது   

* சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பாராட்டு விழா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மாலை 5.30 மணி.

*  முதுகலை பயிலும் சமூகப்பணி மாணவர்களுக்கான மனித உரிமை பயிலரங்கு-பங்கேற்பாளர்களுக்கான பாராட்டு விழா, மனித உரிமை கல்வி நிறுவனம்-மக்கள் கண்காணிப்பகம், மாலை 4 மணி.

* வேலை வழிகாட்டி நிகழ்ச்சி, யாதவா கல்லூரி, திருப்பாலை, காலை 10.15 மணி. 

  ஆன்மிகம்  

* வில்லி பாரதம், சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மைதானம், வடக்கு வெளி வீதி, மாலை 6.30 மணி. சொற்பொழிவு   

*  மூவர் குறள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரர் கோவில், பேசுபவர்: விசயராமன், இரவு 7 மணி.  

குண்டாசில் 2 பேர் கைது

மதுரை, பிப். 13: மதுரை வண்டியூர் ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் சுபேர்அலி (20). மதுரை பொன்னுப்பிள்ளை தோப்புவை சேர்ந்தவர் பாலகணேஷ் (18). இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸ் கண்காணிப்பில் இருந்து வந்த இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்

டார்.

அதன்படி செல்லூர் போலீசார் சுபேர் அலியையும், தெப்பக்குளம் போலீசார் பாலகணேஷையும் குண்டாசில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’  இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)

Related Stories: