மாவட்டம் ‘ஒழுங்கா வேலை செய்ங்க... இல்லேன்னா சஸ்பெண்ட் ெசஞ்சிடுவேன்’ கலெக்டர் அலுவலக ஊழியர்களை கலங்கடித்த முதியவர்

மதுரை, பிப். 13: ‘ஒழுங்கா வேலை செய்ங்க.. இல்லேன்னா சஸ்பெண்ட் செஞ்சிடுவேன்’ என்று மதுரை கலெக்டர் அலுவலக அறைகளுக்குள் நுழைந்து ஊழியர்களை முதியவர் ஒருவர் கலங்கடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சுமார் 65 வயது மதிக்கதக்க நபர் கோட்சூட் தலையில் குல்லா அணிந்து மாடிக்கு வந்தார். கலெக்டர் அறை எது என மாடியில் உள்ள ஊழியர்களிடம் விசாரித்தார். தொடர்ந்து கலெக்டர் இல்லாததால் திரும்பி வந்தவர், ஒவ்வொரு அலுவலக அறையாக சென்று, ‘எல்லோரும் ஒழுங்கா வேலை செய்ங்க... இல்லேன்னா சஸ்பெண்ட் செஞ்சிடுவேன்.. எந்த வேலையும் செய்யாம, வெளில சுத்துற வேலையெல்லாம் வேணாம்... தொலைச்சுப்புடுவேன்’ என வாய்க்கு வந்தபடி ஊழியர்களை பேசி மிரட்ட ஆரம்பித்தார். முதலில் ஊழியர்கள் இவர் யார் என தெரியாமல் பயந்தனர். பின்னர் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் என பேசி தான் மனநோயாளி என்பதை வெளிக்காட்டினார். இதனால் ஊழியர்கள் இவரை அலுவலகத்தை விட்டு வெளியேற்ற கலெக்டர் அலுவலக பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அங்கு யாரும் ல்லை. இதனால் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். போலீசார் ரோட்டில் வேனை நிறுத்திவிட்டு திமுதிமுவென ஓடி வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இவர்களை பார்த்த பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் ஏதும் பிரச்னையாக இருக்கலாம் என்ற நிலையில் போலீசார் பின்னால் ஓடினர். தொடர்ந்து போலீசார் மாடிக்கு சென்று அங்கு ஊழியர்களை மிரட்டி கொண்டிருந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.போலீசார் கூறுகைகயில், ‘‘மனநோயாளியாக சுற்றித்திரிந்தவர் அலுவலர்களை மிரட்டியதால் பிடித்து செல்கிறோம்’’ என்றனர்.சமீபகாலமாக கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு, வக்கீல் நிர்வாணமாக வலம் வந்தது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இதுபோன்ற சம்பவம் தொடர்கிறது. கலெக்டர் அலுவலகத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். குறிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: