கோவில்பட்டி அருகே அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

கோவில்பட்டி, பிப்.13: கோவில்பட்டி அருகே துறையூரில் ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த அமைச்சர் கடம்பூர்ராஜூ, அதிமுக அரசானது பல்வேறு துறைகளில் நிறைவேற்றிய சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், ரமேஷ், அன்புராஜ், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மகேஷ்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் துறையூர் கணேஷ்பாண்டியன், ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் தங்கமாரியம்மாள், ஆபிரகாம் அய்யாத்துரை, வேலுமணி, துறையூர் ஊராட்சி கழக செயலாளர் பால்பாண்டியன், கிளை செயலாளர் மரியசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: