தூத்துக்குடியில் 16ம் தேதி திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, பிப்.13: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் வரவேற்கிறார். இதில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசுகிறார். மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் நன்றி கூறுகிறார்.கூட்டத்தில் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: