கோவில்பட்டியில் இன்று மின்தடை

கோவில்பட்டி, பிப்.13: கோவில்பட்டி நகரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் கோவில்பட்டி நகர் மேற்கு விநியோக பிரிவிற்கு உட்பட்ட மெயின்ரோடு பத்மா கிளினிக் முதல் ரகுராம் திருமணம் மண்டபம் வரை மற்றும் சீனிவாச அக்ரஹாரம் தெரு ஆகிய பகுதிகளில் இன்று (13ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என கோவில்பட்டி மின்விநியோக செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

Related Stories: