ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளி ஆண்டு விழா

நெல்லை, பிப். 13:  ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு நிறைவுஆண்டுவிழா, ஆங்கில வழிக்கல்வி ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பாலராஜ், தலைமை வகித்தார். மேல மெஞ்ஞானபுரம் பங்குத்தந்தை குழந்தைராஜ், பள்ளி தாளாளர் தேவராஜன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி, ஆவுடையானூர் தொழிலதிபர் பொன்னுசாமி நாடார், லயன்ஸ் சங்க தலைவர் சுப்பிரமணியன் முன்னிைல வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் வரவேற்றார். தென்காசி தொகுதி செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். ஆவுடையானூர் சி.ஜெ. எலும்பு முறிவு மருத்துவர் தர்மராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா, பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர்கள் அருள்செல்வராஜ், ராஜமணி வாழத்துரை வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆவுடையானூர் ெதாழிலதிபர் ராஜேந்திரன்,பொறியாளர் பாட்டர்சன்குழந்தைசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லூர்துசேவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் சகாயஅந்தோணி அலெக்ஸ் நன்றி கூறினார்.

Related Stories: