தென்காசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தென்காசி, பிப்.13:  தென்காசியில் நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அமமுக சார்பில் ஜெ.பிறந்த நாள் விழா குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சுமதிகண்ணன், துணை செயலாளர்கள் மூர்த்தி, பிச்சம்மாள்சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர செயலாளர் உச்சிமாகாளி என்ற துப்பாக்கிபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா ஆகியோர் பேசினர். இளைஞரணி துணை செயலாளர் சின்னத்துரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு முகம்மது மீரான், ஒன்றிய செயலாளர்கள் பண்டாரம், லியாகத்அலி, பெரியதுரை, முருகையா, துரைபாண்டியன், குருசேவ், முருகையாபாண்டியன், அரிபரந்தாமன், நகர செயலாளர்கள் சங்கரபாண்டியன், முத்தையா, கமாலுதீன், சங்கரசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் சிக்கந்தர்நியாஸ், மாவட்ட நிர்வாகிகள் தங்கபாண்டியன், மகேஸ்வரன், வீரபுத்திரன், அமுதா, அருள்ராஜ், கோதர்ஷா, கோட்டைச்சாமி, பூசத்துரை, சசிகுமார், பொன்முத்துவேல்சாமி, கவிதா, மாரியப்பன், சிவஆனந்த், குத்தாலபெருமாள், சுப்பையா, சுரேஷ், ராஜாமுகம்மது, அகமதுஷா, அப்துல்காதர், பேரூர் செயலாளர்கள் கணேசன், வேலமுருகன், பரமசிவன், திருப்பதி, நாகூர்மீரான், காஜாசெய்யதுஒலி, ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழகங்களில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவது, ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் செய்வது, பாராளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அயராது பாடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் துப்பாக்கிபாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories: