இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாஜவினர் வீடுகளில் கட்சி கொடியேற்றினர்

நாகர்கோவில், பிப்.13 : பாஜகவை தோற்றுவித்த தீனதயாள் உபத்யாய நினைவு தினமான நேற்று பாஜவினர் வீடுகளில் கட்சி கொடியேற்ற வேண்டும் என பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார்.

 இதன்படி  நாகர்கோவில் வெள்ளாடிச்சி விளையில் மாவட்ட துணை தலைவர் முத்துராமன் தனது வீட்டில் கட்சி கொடியேற்றினார். மேலும் அப்பகுதியில் உள்ள பாஜ உறுப்பினர்களின் வீடுகளில் மாவட்ட துணை தலைவர் முத்துராமன் தலைமையில் பாஜ கட்சி கொடியேற்றப்பட்டது.  இதுபோல் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நகர தலைவர் நாகராஜன் தலைமையில் பாஜ உறுப்பினர்களின் வீடுகளில் பாஜ கொடியேற்றப்பட்டது. இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் தேவ், மாநில மகளிரணி பார்வையாளர் உமாரதி ராஜன், நகராட்சி முன்னாள் சேர்மன் மீனாதேவ், முன்னாள் நகர தலைவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அன்னை வேளாங்கண்ணி இன்ஜி. கல்லூரி பேராசிரியைக்கு விருதுநாகர்கோவில், பிப். 13 : யான்சிட்டி-2019 ஆண்டிற்கான விருது  அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி பேராசிரியை கோல்டிங் ஷிபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நாகர்கோ ல் போக்குவரத்து துறை ஆய்வாளர் அருள் ஜோன் வைஸ்லி ராஜ் நாகர்கோவில் ரோட்டரி சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் விருது

வழங்கினார்.  பேராசிரியை கோல்டிங் ஷிபா பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் பேராசிரியர் உஷா மேற்பார்வையில் ‘‘ராமன் ஸ்பெக்ரா கெமிக்கல் ஆராய்ச்சி’’ மூலம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மும்பையில ‘‘பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் 2018ம் ஆண்டு நடந்த மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார். இவரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் (யான் சிட்டி) போக்குவரத்துதுறை ஆய்வாளர் அருள்ஜோன் வைஸ்வி ராஜ், கல்லூரி தலைவர் டாக்டர் பீட்டர் ஜேசுதாஸ், தாளாளர் டாக்டர் செல்வ      குமார், முதல்வர் வளன் அரசு, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

Related Stories: