ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற குமரி மகிளா காங்கிரசாருக்கு ஆர்பிஎப் சம்மன்

நாகர்கோவில், பிப்.13: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை கொச்சுவேளிக்கு கொண்டு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தனர். இதில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட 25 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை தரப்பில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் ரயில்வே பாதுகாப்பு படை பொறுப்பு அதிகாரிக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை திருவனந்தபுரம் கொச்சுவேளிக்கு கொண்டு செல்வதை கண்டித்து, பொதுமக்கள் ஆதரவோடு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர் ஜனநாயக ரீதியாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்தநிலையில் போராட்டத்தில் பங்கேற்ற மகிளா காங்கிரஸ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்பு படை பொறுப்பு அதிகாரியிடம் இருந்து சம்மன் (அழைப்பாணை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே சட்ட 174ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட மக்களின், ரயில் பயணிகளின் உரிமைக்காக நடைபெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் விதத்தில் ரயில்வே துறை அதிகாரிகள் செயல்படுவது கண்டனத்திற்குரியது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ரயில்வே துறை அதிகாரிகள் கொச்சுவேளிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கொண்டு செல்லக்கூடாது என்ற கருத்து அடிப்படையில் நடைபெற்ற போராட்டத்தை கொச்சைப்படுத்தும், பழிவாங்கும் நடவடிக்கைகளை ரயில்வே துறை அதிகாரிகள் செய்தால் குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்துவது என்பதை  தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் இது சம்பந்தமாக குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது மக்கள் ஆதரவோடும், அனைத்து கட்சியினர் ஆதரவோடும் தொடர் போராட்டங்கள் நாகர்கோவில், கோட்டார் ரயில் நிலையம் முன்பு நடத்தும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் அருள் சபிதா பிரபு, வட்டார தலைவர் ராஜஜெகன், மாவட்ட துணைத்தலைவர் சிவகுமார், மகாலிங்கம், முருகானந்தம் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

களியக்காவிளை, பிப். 13: களியக்காவிளை அருகே துர்நாற்றத்துடன் கேரளாவில் இருந்து மீன் கழிவுடன் வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். களியக்காவிளை சந்திப்பு பகுதியில் உள்ள செக்ேபாஸ்ட் வழியாக நேற்று மதியம் கேரள பதிவெண் கொண்ட ஒரு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு துர்நாற்றத்துடன் வந்து கொண்டிருந்த அந்த லாரியை செக்போஸ்ட் பணியில் இருந்த போலீசார் சைகை காண்பித்து நிறுத்த முயன்றனர். ஆனால், டிரைவர் போலீசாரை கண்டு கொள்ளாமல் தமிழக பகுதிக்குள் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றார். இது குறித்து களியக்காவிளை செக்போஸ்ட் போலீசார் படந்தாலுமூடு செக்போஸ்ட் போலீசாருக்கும், களியக்காவிளை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து படந்தாலுமூடு செக்போஸ்டில் பணியில் இருந்த போலீசார் கன்டெய்னர் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தனர். சில நிமிடங்களில் படந்தாலுமூடு செக்போஸ்ட் வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் சைகை காண்பித்து நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது. ஆத்திரமடைந்த செக்போஸ்ட் போலீசார் 2 பைக்குகளில் லாரியை பின்ெதாடர்ந்து சென்றனர். சுமார் 2 கி.மீ. துரத்திச் ெசன்ற நிலையில், குழித்துறை அடுத்த கல்லுத்தொட்டி பகுதியில் வைத்து போலீசார் லாரியை மறித்து நிறுத்தினர். அப்போது டிரைவர் தப்பிச்ெசல்ல முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார் கன்டெய்னர் லாரியை திருப்ப ெசய்து களியக்காவிளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் காவல் நிலையம் அருகே சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு டிரைவரை அழைத்துச்ெசன்று விசாரித்தனர். இதில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ரகுமான் என்பதும், கொல்லம் மாவட்டத்தில் மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு தமிழகத்தில் உள்ள ஒரு பன்றிப்பண்ணைக்கு கொண்டு ெசல்வதாக தெரிவித்தார். இதற்கிடையே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தில் திரண்டு முறையிட்டனர். இதையடுத்து ேபாலீசார் அந்த வாகனத்தை  களியக்காவிளை அடுத்து கேரள பகுதியான இஞ்சிவிளையில் சாலையோரம் நிறுத்திவிட்டு அதன் சாவி மற்றும் ஆவணங்களுடன், டிரைவரையும் களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து கொல்லத்தில் உள்ள கன்டெய்னர் லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: