பயோமெட்ரிக் வருகை பதிவு பள்ளிகள் வாரியாக ஆசிரியர் அலுவலர்கள் விபரம் சேகரிப்பு இணை இயக்குநர் உத்தரவு

நாகர்கோவில், பிப்.13: ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர், அலுவலர் விபரங்கள் பள்ளிகள் வாரியாக சேகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2018-19ம் நிதியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி முறையான வருகை பதிவு முறைமை அமல்படுத்துதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தமிழக பள்ளி கல்வி இணை இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘ஆதாருடன் இணைந்த வருகை பதிவு முறையை அமல்படுத்த மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் எண்ணிக்கையை சேகரித்து அனுப்ப வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: