பிளஸ்2 பொதுத்தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எடுத்துச் செல்ல வழித்தட வரைபடம் தயாரிப்பு பணி தொடங்கியது

வேலூர், பிப்.13: பிளஸ்2 ெபாதுத்தேர்வுக்கு வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தடங்களுக்கான வரைபடங்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்கள் அமைக்கும் பணியிலும், வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கையிலும், தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எடுத்து செல்வதற்கான வழித்தடங்கள் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 169 மையங்களில் நடைபெற உள்ளது. அதையொட்டி, தேர்வு மையங்களுக்கு தேர்வு நடைபெறும் நாளன்று காலையில் பள்ளிகளுக்கு வினாத்தாள் வழங்க வசதியாக மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய 16 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து, எத்தனை தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும், எந்த வழியாக எடுத்து செல்ல வேண்டும், ஒவ்வொரு மையத்திற்கு வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து எவ்வளவு நேரத்திற்குள் செல்ல முடியும் என்பது குறித்த விவரங்கள் அடங்கிய வரைபடம் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: