பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

செங்கல்பட்டு, பிப்.13: செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த  நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த  நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் சையது உஸ்மான் தலைமையில் போராட்டம் நடத்தினர். இதையொட்டி, நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, பேரணியாக செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகம் சென்றனர். அங்கு தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அதில், 55 வயதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் இறந்தால் இழப்பீடு ₹50 லட்சம் நிதி வழங்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு 5 ஆண்டு வரை மாதம் ₹10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Related Stories: