கிளியாற்று தடுப்பணையில் உலக வங்கி குழுவினர் ஆய்வு

மதுராந்தகம், பிப்.13: மதுராந்தகம் அடுத்த கேகே புதூர் கிராமதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிளி ஆற்றின் குறுக்கே கடந்த 2015ம் ஆண்டு, உலக வங்கி நிதி உதவியுடன் சுமார் ₹4.5 கோடியி தடுப்பணை கட்டப்பட்டது. இதையொட்டி, 4 ஆண்டுகளாக தடுப்பணை மூலமாக மக்கள் எவ்வாறு பயனடைந்துள்ளனர். இதன்மூலம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து உலக வங்கி திட்டங்கள் மதிப்பீட்டு குழு தலைவர் ராமச்சந்திரன், புவனேஸ்வரி ஆகியோர் நேற்று முன்தினம் தடுப்பணை அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது கிராம மக்கள், அதிகாரிகளிடம் தடுப்பணையின் மூலம் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் போதிய தண்ணீர் கிடைக்கிறது, இதனை கொண்டு நல்ல முறையில் விவசாயம் செய்கிறோம். மேலும் இந்த தடுப்பணை அமைந்துள்ள பகுதியில் மண் சேர்ந்துள்ளது.

எனவே இப்பகுதியில் தூர்வாரினால் மேலும் கூடுதலாக தண்ணீர் நிற்கும். அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தனர். இந்த ஆய்வில் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், மதுராந்தகம் உதவி செயற்பொறியாளர் ஜெகராஜ், உதவி பொறியாளர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: