உத்திரமேரூர் பகுதிகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை

உத்திரமேரூர் பிப்.13: , உத்திரமேரூர் பகுதியில் உள்ள வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

உத்திரமேரூர் பேரூராட்சியில் சுமார் 18 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக செய்யாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நிரப்பப்படுகிறது. பின்னர், பேரூராட்சி முழுவதும் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால், ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் போதிய தண்ணீர் வரத்தின்றி கோடைகாலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையொட்டி பேரூராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரினை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரை மின் மோட்டார் மூலம் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநீரை வீணாக்காமல் முறையாக பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: