திருப்போரூர் தொகுதி ஊராட்சி சபைக் கூட்டங்கள் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

காஞ்சிபுரம், பிப்.13: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளில் நேற்று நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டங்களில் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, பங்கேற்றார். வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.திமுக சார்பில் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சி சபைக் கூட்டம் ஊராட்சி செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமையிலும், மேலையூரில் ஊராட்சி செயலாளர் செல்வராஜ், பனங்காட்டுப்பாக்த்தில் ஊராட்சி செயலாளர் ஜி.சரவணன், வெண்பேடில் ஊராட்சி செயலாளர் ரமேஷ்  ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.ஊராட்சி சபைக் கூட்டங்களில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் வரவேற்றார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அவலங்களை எடுத்து கூறினார். இந்த ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்ற பொதுமக்கள், சாலை பிரச்னை, குடிநீர் பிரச்னை, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேடு, ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்குவதில்லை, முதியோர் உதவித் தொகை முறையாக வழங்குவதில்லை, பஸ் வசதி இல்லை என்பது உள்பட அரசு நிர்வாகத்தின் அவலங்கள் குறித்து புகார் கூறினர். அப்போது, பொதுமக்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த தா.மோ.அன்பரசன், மத்திய - மாநில அரசின் அவலங்களையும், முறைகேடுகளையும் எடுத்து கூறி விரைவில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைவரின் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், திருப்போரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பையனூர் எம்.சேகர், திருப்போரூர் பேரூர் செயலாளர் மு.தேவராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வீ.விஜயகுமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் க.கௌரிசங்கர், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கெஜராஜன், வாசுதேவன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: