காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் சிலை திறப்பு விழா

காஞ்சிபுரம், பிப்.13: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் அண்ணா அரங்கம் அருகில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் கல்வெட்டை திறந்து, கொடியேற்றும் விழா நாளை நடக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்துவைக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் அண்ணா அரங்கம் அருகில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சிலையை திறந்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தேரடியில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார்.

காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்கிறார். மாவட்ட அவைத்தலைவர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ, மாவட்ட துணைச்செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதையொட்டி, வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் சார்பில் சேக்காங்குளம் பகுதியில் பிரமாண்ட கல்வெட்டு கொடிக்கம்பம் திறப்பு விழா நடைபெற உள்ளது.  தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 20 அடி உயர கல்வெட்டை திறந்துவைத்து, 95 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியேற்றுகிறார்.

கல்வெட்டில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள் மற்றும் ஐம்பெரும் முழக்கங்கள் இடம் பெறுகின்றன. இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் சிறுவேடல் செல்வம் செய்கிறார். காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் பொன்னேரிக்கரை பகுதியில் 90 அடி உயர கம்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி கொடியேற்ற உள்ளார்.  இதையடுத்து, காஞ்சிபுரம் நகர திமுக சார்பில் ரங்கசாமி குளம் பகுதியில் 18 அடி உயர கல்வெட்டை திறந்து, 86 அடி உயர கம்பத்தில் கொடியேற்ற உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகி எஸ்கேபி சீனிவாசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: