ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை, பிப்.13: ஊத்துக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற வழங்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதித்தது. இந்திய பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை உயர்த்த வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும, பட்ஜெட் தாக்கலின் போது வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், நாடு முழுவதும் அனைத்து மாநில வழக்கறிஞர்களுக்கும் குறைந்த விலையில் நிலங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊத்துக்கோட்டையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதித்தது. போராட்டத்திற்கு ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செஞ்சிநாதன் தலைமை தாங்கினார், செயலாளர் சாமுவேல், பொருளாளர் மகேந்திரன் உள்ளிட்ட 100கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.

Related Stories: