கட்டிடம் கட்டுவதற்காக தெருவில் குவித்திருந்த மணலை திருடிய வாகனம் சேற்றில் சிக்கியது

பொன்னேரி, பிப்.13: பொன்னேரி அருகே வீடு கட்ட சாலையில் குவித்து வைத்திருந்த மணல் திருடி வாகனத்தில் ெகாண்டு செல்ல முயன்றபோது சக்கரம் சேற்றில் சிக்கி நகராததால் தப்பியது. இதையடுத்து 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கஜா (50).  இவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளுக்காக 3 யூனிட் ஆற்று மணல் வாங்கி வீட்டின் அருகே குவித்து வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு  வீட்டில் கஜா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டுள்ளது. உடனே எழுந்து வீட்டின் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சரக்கு வாகனத்தில்  5 பேர் கொண்ட கும்பல்  மணல் ஏற்றிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தனியாக வந்த அவரை, அந்த கும்பல் தாக்கிவிட்டு மணல் ஏற்றிய வாகனத்துடன் தப்பி செல்ல முயன்றது. ஆனால், எதிர்பாராமல் சக்கரம் சேற்றில் சிக்கி நகரவில்லை. உடனே, வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு கும்பல் தப்பியது.இது குறித்த புகாரின்பேரில பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மணலுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வாகனத்தின் பதிவு எண் மூலம், அதன் உரிமையாளர் மற்றும் மணல் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது மணலுக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கட்டுமான பணிக்கு வைத்திருக்கும் மணல் திருடுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: