ஜெயங்கொண்டம் அருகே தூயலூர்து அன்னை ஆலய தேர்பவனி

ஜெயங்கொண்டம்,பிப்.12: ஜெயங்கொண்டம் அருகே தூயலூர்து அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.

அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தென்னூர் கிராமத்தில் தூய லூர்து அன்னை  ஆலய ஆடம்பர தேர்பவனி மற்றும் ஆண்டு பெருவிழா வானது கடந்த 2ந்தேதி அன்று  புதிய கொடிமரம் புனித படுத்தி கொடியேற்ற த்துடன் துவங்கியது.

கும்பகோணம்  மறைமாவட்ட முதன்மை குருஅமிர்தசாமி, மறைவட்ட முதன்மை குருதேவதாஸ்  ஆகியோர் கொடியை ஏற்றி வைத்து கூட்டுத்திருப்பலி நடத்தினர்.  தொடர்ந்து  தினமும் மாலை 6மணிக்கு சிறிய தேர்பவனியும், திருப்பலி மறையுரை சிந்தனைகள்  பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியும், மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளும்  நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலை ஜெயங்கொண்டம் மறைவட்ட முதன்மை குரு  ரோச் அலெக்சாண்டர் மற்றும் மறைவட்ட அருட்தந்தையர்கள் நடத்திய  கூட்டுதிருப்பலி நடை பெற்றது. இரவு புனித மிக்கேல் அதி தூதர், புனித  அந்தோணியார், புனித செபஸ்தியார், புனித சூசையப்பர், மற்றும் புனித லூர்து  அன்னை ஆகிய ஐந்து தேர்களில் மலர்கள், மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு  முக்கியவீதி வழியாக வீதியுலா வந்தன.

இதில் இறைமக்கள்  கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்தவண்ணம் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர். நேற்று காலை பங்கு தந்தை பிலிப்சந்தியாகு மற்றும்  அருட்தந்தையர்கள் சேர்ந்து புனித லூர்து அன்னையின் திருவிழா திருப் பலி  நடை பெற்று.  

கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான  ஏற்பாடு களை பங்குதந்தை பிலிப்சந்தியாகு, பங்குப் பேரவையினர் மற்றும்  தென்னூர் பங்கு இறைமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: