கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் போக்குவரத்து நெருக்கடி

கம்பம், பிப்.12: கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.

கம்பம் நகராட்சியில் முக்கிய வீதியாக உள்ள வேலப்பர் கோயில் தெருவில் அதிகமான வணிக வளாகங்கள் உள்ளன. இவை தவிர தனியார் கிளினிக் அதிகம் செயல்படுகிறது. இங்கு வரக்கூடிய பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் வருகின்றனர். இதனால் தினமும் போக்குவரத்து நெருக்கடி உண்டாகிறது.

ஒருவழிப்பாதையாக மாற்றியும் அதை உரியவகையில் போலீசார் முறைப்படுத்தாததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரகிறது. எனவே, வேலப்பர் கோயில் தெருவை முறைப்படுத்திட போக்குவரத்து போலீசார் முன்வரவேண்டும்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` கம்பம் நகரின் அதிகமான வாகனநெரிசல் பகுதியாக உள்ள வேலப்பர் கோயில் தெருவை முறைப்படுத்த வேண்டும். காலை, இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உண்டாகிறது. வாகனங்கள் செல்லமுடியவில்லை. மக்கள் நடக்கக்கூட இடமில்லை என்று தெரிவித்தனர்.

Related Stories: