150 வீரர்களுக்கு இலவச உபகரணங்கள் கால்பந்து அகாடமி வழங்கியது

தேனி, பிப். 12: தேனியில் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கால்பந்து உபகரணங்கள் இலவசமாக கால்பந்து அகாடமி சார்பில் வழங்கப்பட்டது.

தேனி எஸ்டிஎம்எம் கால்பந்து அகாடமி மற்றும் சீமென்ஸ் கமேசா அமைப்பு சார்பில் 10 வயதுக்குட்பட்டோர், 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்ட கால்பந்து பயிற்சியாளர்களுக்கு இலவசமாக கால்பந்து உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அகாடமி தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். இதில் சீமென்ஸ் கமேசா மேலாளர் அருண்பிரசாத், தொழிலதிபர் சந்திரசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் மனோகரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியின்போது, மாவட்ட போலீஸ் எஸ்.பி பாஸ்கரன் கலந்து கொண்டு கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ள 150 சிறுவர், சிறுமியர்களுக்கு இலவசமாக கால்பந்து உபகரணங்களான சீருடைகள், காலணிகள், பந்து உள்ளிட்டவை வழங்கினார்.

தேனி விளையாட்டுக்கழக தலைவர் ஜெகதீசன், தேனி காஸ்மாஸ் கிளப்பை சேர்ந்த டெர்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கால்பந்து பயிற்சியாளர் முத்தமிழ் நன்றி கூறினார்.

Related Stories: