குமரியில் சாரல் மழை நீடிப்பு

நாகர்கோவில், பிப். 13: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை காணப்படுகிறது. நேற்று காலை வரை மயிலாடியில் 2.8, சிற்றார்-1ல் 3 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 3 அடியாக இருந்தது. அணைக்கு 183 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 226 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 50.75 அடியாக இருந்தது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 421 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 13.22 அடியாக நீர்மட்டம் இருந்தது.

அணைக்கு 147 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 13.32 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 12.30 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 47.08 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.

Related Stories: