மதுரை ஜிஹெச்சில் அமரர் - தாய் சேய் நல ஊர்திகள் அதிரடி ஆய்வு ஊழியர்களிடமும் குறைகளை கேட்டறிந்தனர்

மதுரை, பிப். 12: தினகரன் செய்தி எதிரொலியாக மதுரை அரசு மருத்துமவனையில் அமரர் ஊர்திகளுடன், தாய் சேய் நல ஊர்திகளையும் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து, ஊழியர்களிடமும் குறைகளை கேட்டறிந்தனர்.

 மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள இலவச அமரர் ஊர்திகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களை வீட்டுக்கு கூட்டி ெசல்லும், தாய்-சேய் இலவச ஆம்புலன்ஸ்கள் முறையாக  பராமரிக்காமல் அடிக்கடி பழுது ஏற்பட்டு, பல வண்டிகள் பயன்பாடில்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தினகரன் நாளிதழில் `அமரரான அமரர் ஊர்திகள்’  என்ற தலைப்பில் நேற்று செய்தி படத்துடன் வெளியானது. அதில் ஆம்புலன்ஸ்களின் தற்போதைய நிலையும், ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகளும் சுட்டிக்காட்டப்பட்டன. இதன் எதிரொலியாக நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ்கள் அனைத்தையும் ஆய்வு செய்து ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

 இதற்காக சுகாதாரத்துறை இணை இயக்குனர் திருநாவுக்கரசு, திட்ட ஒருங்கிணைப்பாளர் கேப்டன் காமாட்சி ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனை வந்தது இலவச அமரர் ஊர்திகள் மற்றும் தாய்-சேய் இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்களை முதலில் அழைத்து பேசினர். பின்னர் அனைத்து ஆம்புலன்ஸ்களையும் ஆய்வு செய்து, அந்தந்த ஆம்புலன்ஸில் உள்ள குறைகளை அதன் டிரைவர்களிடம் கேட்டறிந்து அவர்கள் கூறிய விபரங்களை குறிப்பெடுத்து கொண்டனர்.  இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், ``அதிகாரிகள் ஆய்வு செய்து ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி பழுதாவதற்கான காரணங்கள் மற்றும் பராமரிப்பது குறித்து கேட்டறிந்தனர். பழதான ஆம்புலன்ஸ்கள் விரைவில் சரிபார்க்கப்படும். தேவைக்கேற்ப கூடுதல் ஆம்புலன்ஸ்கள் பெறவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும் எங்களிடம் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள குறைகளை எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் ெதரிவிக்கலாம், அதை நிவர்த்தி ெசய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்’’ என்றனர்.

Related Stories: