ஏர்வாடியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் கலெக்டரிடம் வலியுறுத்தல்

ராமநாதபுரம், பிப்.12: ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சரவணன் தலைமையில் கலெக்டர் வீரராகவராவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில் தெரிவித்ததாவது, ஏர்வாடி ஊராட்சியில் சுமார் 30 ஆயிரம் பொதுமக்கள் உள்ளனர். 11 ஆயிரத்து 700 வாக்காளர்களை கொண்டது. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெட்டமனை, சின்ன ஏர்வாடி, மெய்யன்வலசை, பி.எம்.வலசை உள்ளிட்ட பல கிராம பகுதிகள் உள்ளன. ஊராட்சியில் உள்ள ஏர்வாடி தர்கா பிரச்சித்தி பெற்ற இடம்.  வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான யாத்ரிகர்கள் வந்து செல்கின்றனர்.  ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா உலக புகழ் பெற்றது. இருப்பினும் இதுநாள்வரை ஏர்வாடி ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படாமல் செயல்பட்டு வருகிறது.  ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.   மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories: