சாயல்குடி, நம்புதாளையில் வாக்காளர் ஒப்புகை சீட்டு செயல் விளக்கம்

தொண்டி, பிப்.12:  நம்புதாளை அரசு பள்ளியில் வாக்காளர் ஒப்புகை சீட்டு பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தலில் வாக்காளர் அளிக்கும் வாக்குகள் எந்த கட்சிக்கு என்பதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது ஒப்புகை சீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வாக்காளர்களிடம் அறிமுகப்படுத்தும் விதமாக வாக்குச்சாவடிகளில் செயல் விளக்கம் நடைபெற்றது வருகிறது. நேற்று தொண்டி அருகே நம்புதாளை அரசு ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் இவ்விளக்கம் நடைபெற்றது. வருவாய் கோட்டாச்சியர் சுமன், தாசில்தார் கணேசன், ஆர்.ஐ அருன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

விவிபெட் எனப்படும் இந்த இயந்திரத்தில் தாங்கள் வாக்களிக்கும் கட்சியின் பெயர் தெரியும். 7 நொடிகளில் இதை பார்த்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டு பெட்டியின் உள்ளே விழுந்து விடும். எண்ணிக்கையின் போது சீட்டுக்கும் வாக்கு எண்ணிக்கையும் சமமாக உள்ளதா என்பதை உறுதி படுத்திக்கொள்ளலாம் என்றார். சாயல்குடி: கடலாடி தாலுகாவில் ஒருவனேந்தல், மாரியூர் உள்ளிட்ட 13 வாக்குச்சாவடி மையங்களில் தாசில்தார் கோபால், துணை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது. முதுகுளத்தூரில் துணை வட்டாட்சியர்கள் சடையாண்டி ஸ்ரீதர், வட்டார வழங்கல் அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் 13 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள், வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓகள் கலந்து கொண்டனர்.

Related Stories: