காளையார்கோவிலில் ஓய்வூதியர் தினவிழா

காளையார்கோவில், பிப். 12: காளையார்கோவிலில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக ஓய்வூதியர் தினவிழா கொண்டாடப்பட்டது.காளையார்கோவிலில் ஓய்வூதியர் வட்டார கிளையின் சார்பாக நடந்த விழாவிற்கு வட்டாரத்தலைவர் ஜேசுமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கந்தசாமி, முத்துமாடன் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் லூர்துராஜ் வரவேற்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் பழனிவேலு, மாவட்ட பொருளாளர் ஹக்கிம், மாவட்ட துணைத்தலைவர் முகமது ரபீக் ஆகியோர் பேசினர்.காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். காளையார்கோவில் தெப்பக்குளத்தை காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் நிரப்ப வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய இருதயராஜ் வாழ்த்துரை வழங்கினர். வட்டார பொருளாளர் லூயி நன்றியுரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதார்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வு அவசியம்விவசாயிகள் கூறியதாவது: நீர் வரத்து வழியில் உள்ள பாலங்கள், மடைகள் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. ஒன்றிய கண்மாய்களில் பல இடங்களில் விவசாயிகள் சேதமடைந்த நிலையில் உள்ள மடைகள், பாலங்கள் குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. பாலங்கள், மடைகள், நீர் வழித்தடங்களில் உள்ள சிறிய தடுப்பணைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் காலாவதியானவற்றிற்க்கு பதில் புதியவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் வரத்து பாதைகளான கால்வாய்களை தொடர்ந்து பராமரிப்பு செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: