ஆலோசனை கூட்டம்

காரைக்குடி, பிப். 12: காரைக்குடியில் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் வரவேற்றார். நகர தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் 22ம் தேதி தமிழகத்தில் பாஜ அகில இந்திய தலைவர் அமித்ஷா தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு சிவங்கை மாவட்டத்தில் இருந்து அதிகளவில் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் மாநில துணை தலைவர் சுப.நாகராஜன், மாவட்ட துணை தலைவர் எஸ்வி.நாராயணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், கல்லல் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

Related Stories: