ராணுவவீரர் உட்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வேலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு காட்பாடி அருகே தந்தை, மகனை எரித்து கொலை வழக்கில்

வேலூர், பிப்.8: காட்பாடி அருகே தந்தை, மகனை எரித்து கொலை செய்த வழக்கில் ராணுவவீரர் உட்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கி வேலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி சின்னகேசகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேந்திரன்(27). இவருக்கும் இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த ராணுவவீரரான பீம்சிங்(50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பீம்சிங் மகனான மனோஜ்சிங்குக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மகேந்திரன் ₹1.36 லட்சத்தை பீம்சிங்யிடம் பெற்றுள்ளார். பின்னர் வேலை வாங்கி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.இதற்கிடையில் மகேந்திரன் சொந்த ஊரான சின்னகேசகுப்பத்திற்கு வந்ததார். தொடர்ந்து பீம்சிங் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து உவேலை கிடைத்துவிட்டது. பணிநியமன கடிதம் பெற்றுக்கொள்ள தந்தை மற்றும் மகன் இருவரும் காட்பாடிக்கு வரும்படி மகேந்திரன் கூறினார். இதைடுத்து அவர்கள் காட்பாடிக்கு கடந்த 10.10.2014 அன்று வந்து காந்திநகரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி உள்ளனர்.

பின்னர், 13.10.2014ம் அன்று மகேந்திரன் மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த காளிதாசன்(27) என்பவரது காரில் வந்து பீம்சிங் மற்றும் அவரது மகன் மனோஜ்சிங் ஆகியேரை காரில் அழைத்து சென்றனர். இருவருக்கும் முதலில் மதுவில் பூச்சுமருந்து கலந்து கொடுத்துள்ளனர். இருவரும் மயங்கிய நிலையில் அவர்களுக்கு விஷ ஊசி போட்டு, சரமாரியாக தாக்கி, தலையில் கல் போட்டு கொலை செய்து எரிந்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மககேந்திரன் மற்றும் காளிதாசன் ஆகியோரை கைது செய்தனர்.இந்த வழக்கு வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி குணசேகர் விசாரித்து மகேந்திரன் மற்றும் காளிதாசனுக்கு கொலை செய்ததற்காக ஒரு ஆயுள்தண்டணையும், கடத்தி சென்று கொலை செய்ததற்காக ஒரு ஆயுள்தண்டனையும், குற்றத்தை மறைத்த காரணத்திற்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கினார். மேலும் இவருக்கு தலா ₹3 ஆயிரம் அபராதம் விதித்தும், மகேந்திரன் மட்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹21 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். குற்றத்தின் கடுமையை கருத்தில் கொண்டு 20 ஆண்டுகள் வெளியே வராமல் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய அரசு சலுகை வழங்கினாலும், 20 ஆண்டுகளுக்கு வெளியே வரமால் தண்டணை அனுபவிக்க வேண்டும் என பரபரப்பு தீர்வு வழங்கினார்.

Related Stories: