ஆசிரியர்களிடம் கூறி தடுத்து நிறுத்திய பள்ளி மாணவி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை தனக்கு நடந்த இருந்த திருமணத்தை

செய்யாறு, பிப். 6: செய்யாறு தாலுகாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றார். இந்நிலையில் 16 வயதான மாணவிக்கு இவரது பெற்றோர் அவர்களது உறவினர்களின் துணையுடன் திருமணம் முடிக்க முடிவு செய்தனர்.அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஒரு பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நிச்சயம் செய்திருந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் வருகிற 11ம் தேதி நடைபெற இருந்தது.இதுகுறித்து பிளஸ் 1 மாணவி, தனது தோழிகளிடம் தெரிவித்துள்ளார். சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பதாக அழுது புலம்பியுள்ளார். இதுகுறித்து மாணவிகள், ஆசிரியர்கள் மூலம் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.தலைமையாசிரியரும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அனக்காவூர் சமூக நல அலுவலர் தாரகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், விஏஓ ஆறுமுகம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் செல்வக்கனி, புவனேஸ்வரி மற்றும் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆகியோர் இதுகுறித்து நேரில் சென்று விசாரணை செய்தனர்.அப்போது மாணவியின் பெற்றோர் திருமண பத்திரிக்கை வைக்க வெளியூர் சென்று இருந்தது தெரிந்தது. இதையடுத்து பள்ளிக்கு சென்ற குழுவினர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவியின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டபோது, அவர்கள் சரியான பதில் கூறவில்லை. இதனால் மாணவியை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்வதாகவும், அங்கு வந்து பேச்சுவார்த்த நடத்த கூறி மாணவியை அழைத்து சென்றனர். பின்னர் மாணவியை மாவட்டத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.தனக்கு நடக்க இருந்த திருமணத்தை மாணவியை தடுத்து நிறுத்தி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: