குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு தண்டராம்பட்டு அருகே பரபரப்பு தாலுகா அலுவலக அதிகாரிகள் வராததால்

தண்டராம்பட்டு, பிப்.6: தண்டராம்பட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதிகாரிகள் யாரும் இக்கூட்டத்திற்கு வராததால் விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில், விவசாயிகளின் குறைதீர்வு நாள் கூட்டம் மாதா, மாதம் முதல் செவ்வாய் கிழமை அன்று நடைபெறும். இதில், விவசாயிகள் தங்கள் குறைகளை கூறி அதன் மூலம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய இக்கூட்டம், பல்வேறு துறை அரசு அதிகாரிகள் யாரும் வராததால் 12 மணி வரை காத்திருந்த விவசாயிகள் பின்னர், தாலுகா அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இந்நிலையில், பின்னர் மதியம் 12.15 மணியளவில் அங்கு வந்த தாசில்தார் சுப்பிரமணியன் விவசாயிகள் அனைவரையும் உள்ளே வந்து அமருங்கள் என்று கூறியபோது, விவசாயிகள் அனைத்து துறை அதிகாரிகளும் வந்தால்தான் நாங்கள் உள்ளே வருவோம் என்று கூறி அனைவரும் வெளிநடப்பு செய்து கலைந்து சென்றனர்.தண்டராம்பட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் தாசில்தார் சுப்ரமணியன்.

Related Stories: