ஜெயங்கொண்டத்தில் பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம்,ஜன.31: ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் பாரம் பரிய உணவு. தானியம் பற்றிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி தனியார் கல்லுரியில் நடை பெற்றது. உடையார்பாளையம் ஆர்டிஓ ஜோதி துவக்கி வைத்து பேசினார். அரியலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றியதாவது: தற்போது அதிக அளவில் நோய்கள் உருவாகி வருகி ன்றன. அது போல மருத்துவர்கள், மருத்துவமனைகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. இதற்கு காரணம் பண்டைய காலத்தில் போல தற்போது பாரம்பரிய உணவை யாரும் எடுத்து கொள்வதில்லை. நம்முடைய மூதாதையர் போல நம்மால் இருக்க முடியாததற்கு காரணம் நாம் உண்ணும் உணவு முறை தான். முந்தைய காலத்தில் உணவு முறைகள் நெல், கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான தானியங் களால் உணவு வகைகள் செய்யப்பட்டு உண்டு வந்தனர். ஆனால் இவை யெல்லாம் மாறி தற்போது பீட்சா, பர்கர், பரோட்டா என மாறி விட்டது என்றார்.

கருத்தரங்கத்தில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் செந்தில் நாதன் , அரியலூர் மருத்துவர் ஞானரூபன், அன்னை தெரசா பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர் சித்த மருத்துவத்தில் உள்ள பயன்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். விழாவை முன்னிட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தானிய வகைகள் காய்கறிகள் கீரை ஆகியவற்றை பொதுமக்கள் கல்லூரி மாணவ , மாணவிகள் கண்டு ரசித்தனர்.

Related Stories: