ஓட்ஸ் பாயசம்

செய்முறை:

ஓட்ஸுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு தனியே வைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சியபின் வேகவைத்த ஓட்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப் பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா கொதிக்கும் பாயசத்துடன் சேர்த்து இறக்கவும். தேவைப்பட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்தால் ருசியாக இருக்கும்.