பெரியகுளம் நீதிமன்றங்களில் நக்சலைட்டுகள் 3 பேர் ஆஜர்

பெரியகுளம், ஜன. 22:  பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றத்தில் நக்சல்கள்  3 பேரை கியூ பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர். தேனி மாவட்டம், பெரியகுளம் முருகமலை வனப்பகுதியில், கடந்த 2007, ஜூன் 26ல் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நக்சல்கள் வேல்முருகன், முத்துச்செல்வம் மற்றும் பழனிவேல் ஆகியோரை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர். மேலும் திருப்பூரில் நக்சல் தலைவர் சுந்தரமூர்த்தி, கார்த்திக் மற்றம் ஈஸ்வரன், பாலன் என்ற பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர்.

முருகமலை பகுதி வழக்கு விசாரணைக்காக சேலம் சிறையிலிருந்து பழனிவேலை தேனி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் குமரேசன் பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதி விஜயகுமார் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை பிப்.4ம் தேதி ஒத்துவைத்தார்.

மற்றொரு வழக்கு வருசநாடு மலைப்பகுதியில் 2007, டிசம்பர் மாதம் மக்களிடம் நக்சல் கொள்கைகளை விளக்கி துப்பாக்கி ஏந்தியபடி பாலமுருகன், முருகானந்தம்,மருது , மகாலிங்கம், யோகேஷ்மதன் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது கியூபிரிவு போலீசாருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து பாலமுருகன், முருகானந்தம் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வந்த மகாலிங்கம் யோகேஷ்மதன் தப்பினர். 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவில் மகாலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கிற்காக மதுரை சிறையிலிருந்து மகாலிங்கம், பாலமுருகனை கியூபிரிவு போலீசார் நேற்று பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள முருகானந்தம் ஆஜரானர். நீதிபதி திலகம், வழக்கின்  விசாரணையை ஜன.28ம் தேதி ஒத்திவைத்தார்.

Related Stories: