தனியார் ஓட்டலில் நிறுவப்பட்டுள்ள குப்பையை உரமாக்கும் இயந்திரம் - மாநகராட்சி கமிஷனர் திறந்து வைத்தார்

திருச்சி, ஜன.22: திருச்சி தனியார் ஓட்டலில் நிறுவப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புடைய மக்கும் குப்பைகளை உரமாக்கும் இயந்திரத்தை மாநகராட்சி கமிஷனர் நேற்று திறந்து வைத்தார்.திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் 250 கிலோ மக்கும் குப்பைகளை 24 மணி நேரத்தில் உரமாக மாற்றும் திறன் கொண்ட ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘இதேபோல் மாநகராட்சியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் குப்பைகளை உரமாக்கும் இயந்திரத்தை நிறுவ வேண்டும். குப்பையில்லா நகரமாக மாற்ற அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.  குப்பைகளை நிறுவனங்கள், கடைகள், திருமண மண்டபங்கள் எதுவாக இருந்தாலும் 50 கிலோவிற்கு மேல் குப்பைகள் சேர்ந்தால் அவர்களே மறுசுழற்சி செய்ய வேண்டும். அதற்கான இயந்திரங்கள் குறித்து ஏற்கனவே கண்காட்சிகளை மூன்று முறை நடத்தியிருக்கிறோம். வீடுகளில் சேரும் மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே உரமாக மாற்றுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். வீடுகளில் குப்பைகளை தரம்பிரித்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வீடுதோறும் வாங்கி வருகிறோம். இதற்காக நுண்உர செயலாக்க மையம் 29 இடங்களில் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். மாநகராட்சி அதிகாரிகள், ஓட்டல் உரிமையாளர் முரளி உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: