புதிய ஊதிய மாற்று ஒப்பந்த விவகாரம் பெல் தொழிற்சங்கங்கள் உண்ணாவிரதம்

திருவெறும்பூர், ஜன. 22:  திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய ஊதிய மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.       

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்கு ஊதிய மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஏடிபி, பிஎம்எஸ், சிஐடியூ, ஏஐடியூசி நிர்வாகிகளுக்கு உடன்பாடு ஏற்படாததால் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. அதேபோல் சில சங்கங்கள் கையெழுத்திடாததால் போடப்பட்ட ஒப்பந்தத்தை பெல் கார்ப்பரேட் நிர்வாகம் ரத்து செய்து தொழிற்சங்கங்களின் கருத்துகளை கேட்டு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சென்னையில் 22ம்தேதி (இன்று) நடக்கும் ஊதிய கமிட்டி பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பெல் வாயில் முன் உண்ணாவிரதம் இருந்தனர்.இதில் ஏ டிபி தொழிற்சங்க பொதுச் செயலாளரும்,  ஒருங்கிணைப்பாளருமான கார்த்திக் தலைமையில் சிஐடியூ பொதுச்செயலாளர் பிரபு ,பிஎம்எஸ் நாகராஜன், ஏஐடியூசி பாலமுருகன் ஆகியோர் உள்பட 4 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதம் மாலை 5 மணிவரை நடைபெற்றது.

Related Stories: