மாணவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ் ஓட்டல்் கடை நடத்துவோர் உணவு பாதுகாப்பு துறை சான்று பெற அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜன.22:சிவகங்கை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு, தயாரிப்பு பணியில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டாயமாக உணவு பாதுகாப்பு துறையில் சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்திலுள்ள ரேசன் கடை, அங்கன்வாடி மற்றும் மதிய உணவு மையங்கள், கோயில் அன்னதானம் மற்றும் பிரசாத ஸ்டால், மருத்துவமனை கிச்சன், கேண்டீன், நகராட்சி ஆடுவதைக் கூடம், அம்மா உணவகம் போன்ற அரசுத் துறை நிறுவனங்கள், ஹோட்டல், மளிகைக் கடை போன்ற தனியார் உணவு வணிகர்களும், உணவுப் பாதுகாப்புத் துறையிடம் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெற வேண்டும். ஹோட்டல்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பணியாளர்களுக்கு தலைக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு அணிகலன்கள் வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை, நிகோடின் கலந்த பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: