மண்டபத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

மண்டபம், ஜன. 22: சுருக்குமடி, இரட்டைமடி வலை மீன்பிடிப்பில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மண்டபத்தில் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு, மீன்வளமும் அழிந்து வருகிறது. இதனால் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.சுருக்குமடி, இரட்டைமடி வலை மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில், பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக வந்து மண்டபம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் போஸ், மண்டபம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் கணபதி தலைமையில் நடந்த போராட்டத்தில் ராமேஸ்வரம், வேதாளை, பாம்பன் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: