பரமக்குடி அருகே தைப்பூச திருவிழாவில் தீர்த்தவாரி உற்சவம்

பரமக்குடி, ஜன.22: பரமக்குடி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி நடந்த  தீர்த்தவாரி நிகழ்ச்சியில் காய்கறிகளை சூறை போட்டு வழிபாடு நடந்தது.பரமக்குடி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி தீர்த்தவாரி வழிபாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. நேற்று தைப்பூச விழாவினையொட்டி நயினார்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகநாத  சுவாமி கோயிலில் உள்ள நாகநாதசுவாமி , சவுந்திரவள்ளி அம்பாள் ஆகிய தெய்வங்கள் பூ பல்லாக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

மஞ்சக்கொல்லை கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் உள்ள மண்டகபடியில் வைக்கப்பட்டு, தீபாராதனைகளும், விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதன் பின்னர் சுவாமிகள் பூப்பல்லாக்கில் வைகை ஆற்றுக்குள் சென்று தீர்த்தவாரி குளத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திருவிழாவில் கலந்து கொள்ள வந்த 12 கிராம பொதுமக்கள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறி மற்றும் பழங்களை சுவாமி மீது சூறையிட்டு வழிபட்டனர். இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கும்போது, வருடந்தோறும் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. சொந்த நிலங்களில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல விளைச்சல் விளைய வேண்டும் என்பதற்காக இந்த திருவிழாவில் காய் மற்றும் பழங்களை சுவாமி மீது சூறை வீசுவோம் என்றார்.

Related Stories: