தொண்டி,நம்புதாளை பகுதியில் நாய்களை தாக்கிய வினோத நோய்

தொண்டி, ஜன. 22:  தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திரியும் நாய்களுக்கு ஒருவித வினோத நோய் தாக்கியுள்ளது. ரோமங்கள் உதிர்ந்து காயங்களுடன் திரிகிறது. இதன் மூலம் ஏதும் நோய் பரவி விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் நாய்களை பிடித்து வெளியேற்ற வேண்டும் என்று பல்ேவறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் திரியும் நாய்கள் ஒருவித வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் ரோமம் உதிர ஆரம்பிக்கிறது. பிறகு உடல் முழுவதும் புண் ஏற்படுகிறது. நடக்க கூட முடியாமல் திரிகிறது. ரோமம் உதிர்ந்து பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஒருவிதமாக சப்தமிடுகிறது.

மேலும் உடலை அடிக்கடி உலுக்குவதால் அதிலிருந்து முடிகள் உதிர்கிறது. இவ்வகை நாய்கள் மூலம் மக்களுக்கு ஏதும் நோய் பரவி விடுமோ என்ற அச்சம் இப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தொண்டியை சேர்ந்த சாதிக் பாட்சா கூறியது, நாய்கள் அதிகமாக ரோட்டில் திரிவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், நோய்கள் பாதித்த நாய்ளால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுமோ என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: