தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை

ஊட்டி, ஜன.22: தீயணைப்புத்துறை சாபில் ஊட்டி நிர்மலா மெட்ரிக் பள்ளியில் தீ தடுப்பு பயிற்சி மற்றும் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆண்டு தோறும் ஜனவரி 21ம் தேதி அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியில் தீ தடுப்பு பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவிளுக்கு தீயணைப்பு பயிற்சிகள், போரிடா்களின் போது மீட்பு பணிகளை மேற்கொள்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீயணைப்புத்துறை மட்டுமின்றி மாணவ, மாணவிகள் மூலமாகவும் ேமற்கொள்வதே இப்பயிற்சியின் நோக்கமாகும். இதன்படி ஊட்டியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பில் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள நிர்மலா பள்ளி வளாகத்தில் தீ தடுப்பு பயிற்சி நேற்று  நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் இமானுவேல் முன்னிலை வகித்து பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் தீ காயம் ஏற்பட்டவர்களை எவ்வாறு காப்பது என்பது குறித்து பேசினார்.

Related Stories: