ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம், ஜன.22: ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளான ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, கேதையுறம்பு, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, கரியாம்பட்டி, தேவத்தூர், இடையகோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தக்காளி நடவு செய்து, அறுவடை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.450 முதல் ரூ.460 வரை விலை போனது. தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ.140 முதல் ரூ.150 வரை விலை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் இருந்து பெருமளவு தக்காளி பெட்டிகள் சென்னை, கேரளா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: