டீசல் பாட்டிலுடன் வந்த தொழிலாளி

தஞ்சை கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் குடும்பத்துடன் வந்தார். அவரது பையை சோதித்தபோது 750 மில்லி லிட்டர் டீசல் இருந்தது. இதையடுத்து போலீசார் விசாரித்தனர். அதில் கும்பகோணம் சோலையப்பன் தெருவில் வசிக்கும் மகேந்திரன் (55) என தெரியவந்தது. இதுகுறித்து மகேந்திரன் கூறும்போது, தன்னுடைய பூர்வீக சொத்து, தஞ்சை அருகே நல்லிச்சேரியில் உள்ளது. இதை உறவினர்கள் சிலர் அபகரித்து கொண்டு தன்னையும் தன் குடும்பத்தினரையும் துரத்திவிட்டனர். தன்னிடமிருந்து அபகரித்த பூர்வீக சொத்தை மீட்டு தரக்கோரி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என டீசல் கேனுடன் வந்தேன் என்றார். இதையடுத்து மகேந்திரன் மற்றும் அவரது மனைவி ஜோதி (41), மகள் கார்த்திகா (13), மகன் விக்னேஷ்வரன் (9) ஆகியோரை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: