அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வலி நிவாரண மையம் விரைவில் தொடங்கப்படும்

தஞ்சை, ஜன.22:   தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடுமையான வலி நிவாரணம் தொடர்பான தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி நேற்று நடந்தது. டீன்  குமுதாலிங்கராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வகித்து பேசியதாவது: நோயாளிக்கு வலி  நிவாரணம் என்பது மிக முக்கிமானது. பொதுவாக பல்வேறு வகையான வலிகள் உள்ளன.  இதில் கடுமையான வலி, நாள்பட்ட வலி ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறது.  கடுமையான வலி என்பது உடனே வரக்கூடியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நாட்களாக வலியால்  அவதிப்படுவது போன்றவற்றை நாள்பட்ட வலி என கூறுகிறோம். வலி நிவாரண  மேலாண்மையில் மயக்கவியல் நிபுணர்கள் முன்னிலையில் உள்ளனர். முன்பு போல மயக்க  மருந்து மட்டும் கொடுக்காமல் வலிக்குரிய தீவிர சிகிச்சை அளிப்பது  உள்ளிட்டவற்றில் மயக்கவியல் நிபுணர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

 தற்போது ஒரு நோயாளிக்கு வாய்வழியாக மாத்திரை கொடுக்கவும்,  ஊசி போடவும் முடிகிறது. இதையும் தாண்டி சிறிய, சிறிய பேண்டேஜ்களை ஒட்டலாம்.  காலில் வலி என்றால் காலுக்கு செல்லும் நரம்பை ஸ்கேன் மூலம் கண்டறிந்து  மருந்து கொடுக்க முடியும். முதுகு வலி என்றால் முதுகில் ஊசி போடுவதன் மூலம்  நிவாரணம் கிடைக்கும்.

\மது பழக்கத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு தீர்வு  ஏற்படுத்த முடியும். இந்த அளவுக்கு வலி நிவாரண மேலாண்மையில் முன்னேற்றம்  அடைந்துள்ளது. எனவே தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வலி  நிவாரண மையம் தொடங்க திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த மையம் விரைவில்  தொடங்கப்படும் என்றார்.

Related Stories: