அதிராம்பட்டினத்தில் கடும் பனிப்பொழிவு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அவதி

அதிராம்பட்டினம், ஜன. 22:  அதிராபட்டினத்தில் கடும் பனிப்பொழிவு இருந்ததால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 1,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் சென்றனர். பின்னர் மீன் பிடித்து விட்டு துறைமுகம் திரும்புவதற்காக தயார் நிலையில் மீனவர்கள் இருந்தனர். அப்ேபாது கடலில் மூடுபனி அதிகமாக இருந்தது. இதனால் துறைமுகத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தின் லைட் மீனவர்களுக்கு ெதரியவில்லை. இதனால் பனிப்பொழிவு குறையும் வரை கடலிலேயே மீனவர்கள் காத்திருந்தனர். பின்னர் கரைகளுக்கு மீனவர்கள் திரும்பி வந்தனர். சில மீனவர்கள் வழி தெரியாமல் திசைமாறி  முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம் போன்ற துறைமுக பகுதிக்கு சென்றுவிட்டனர்.

இதேபோல் அதிராம்பட்டினம் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Related Stories: