தாம்பரம் நகராட்சி பகுதியில் 1000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அதிரடியாக பறிமுதல்

தாம்பரம், ஜன. 22 : தாம்பரம் நகராட்சி பகுதியில் 1000 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தமிழக  அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என  தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் சார்பில் வியாபாரிகளிடம் தொடர்ந்து  தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மேற்கு தாம்பரம் பகுதியில்  தாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர்  ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி  ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது  தமிழக அரசால்  தடைசெய்யப்பட்ட 1000 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்  உள்ளிட்ட பொருட்களை விற்பனை  செய்தவர்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் அபராதம் செலுத்தினர். தொடர்ந்து இது போன்ற  பிளாஸ்டிக் பறிமுதல் நடைபெறும் என்றும், பொது மக்கள் பிளாஸ்டிக்கிற்கு  பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்றும், தமிழக அரசின் இந்த  திட்டத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் நகராட்சி ஆணையர், தாம்பரம்  நகர பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

Related Stories: