பள்ளி செல்லா குழந்தைகள் சிறப்பு கணக்கெடுப்பு பணி

காஞ்சிபுரம், ஜன.22: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல் சூளைகள் மற்றும் கட்டிடப் பணி நடைபெறும் இடங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடிபெயர்ந்து வந்து தங்கியுள்ளனர்.  எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பள்ளி செல்லா குழந்தைகள் சிறப்பு கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 6 வயது முதல் 14 வயது வரையான பள்ளி வயதுக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க சிறப்பு கணக்கெடுப்புப் பணி ஒன்றியங்களில் ஜன.21ம் தேதிமுதல் ஜன.31ம் தேதிவரை நடைபெறுகிறது.

இந்தப் பணியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலகம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம், தொழிலாளர் நல ஆய்வாளர், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகிய துறை உறுப்பினர்களை கொண்டு நடத்தப்படுகிறது. எனவே, இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: