தைப்பூச திருவிழா

வாலாஜாபாத், ஜன.22: வாலாஜாபாத் அடுத்த தொள்ளாழி கிராமம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமண்யஸ்வாமி கோயிலில் 17ம் ஆண்டு தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. காலை 10மணிக்கு நுற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்காவடி எடுத்து முக்கிய வீதிகளில் வழியாக சென்று சுவாமியை வழிப்பட்டனர். மாலை 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைப்பெற்றது.இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வீதிகள் தோறும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழைத்தோரணம், வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தைப்பூசத் திருவிழாவைக் காண தேவரியம்பாக்கம், வாரணவாசி, உள்ளாவூர், ஆம்பாக்கம் என சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமாக கலந்துகொண்டு சுவாமியை வழிப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: