செங்கல்பட்டு நகரில் பெற்றோரை தவறவிட்டு சாலையில் திரிந்த 2 வயது சிறுமி மீட்பு அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு

சென்னை, ஜன.22: செங்கல்பட்டு நகரில் பெற்றோரின்றி ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிந்துகொண்டிருந்த 2 வயது சிறுமியை பொதுமக்கள் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு உள்ளது. 120 கோடி மக்கள் வாழும் நம் நாட்டில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் 1 - 5 வயது குழந்தைகளாக உள்ளனர். இந்தியாவில் நிமிடத்திற்கு 34 குழந்தைகள் என்ற விகிதத்தில் பிறக்கின்றனர். அதே நேரம் நாள் கடந்த 2017ம் ஆண்டு கணக்குப்படி இதியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 180க்கும் அதிகமான குழந்தைகள் பல்வேறு காரணங்களால் பெற்றோரை விட்டு பிரிகின்றனர். இதல் 50 சதவிதத்திற்கும் மேலாக  காணாமல் போகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர். இந்த கணக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று ஆயுவுகள் கூறுகிறது.

மேற்கண்ட கணக்கிற்கு சம்பந்தப்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் நேற்று நடந்துள்ளது. செங்கல்பட்டு அழகேசன் நகர், அண்ணா சாலை பகுதியில் நேற்று காலை சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுமி அழுதபடி திரிந்துகொண்டிருந்தாள். இதை பார்த்த பொதுமக்கள் சிறுமியை அழைத்து விசாரித்தபோது அதற்கு விவரம் சொல்லதெரியாமல் திணறியது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து பெண் காவலர்கள் குழந்தைக்கு பால், பிஸ்கெட் கொடுத்து பெயர், விவரம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி தனது பெயர் சுவேதா என்று மட்டும் கூறியுள்ளார். ஆனால் தாய், தந்தை யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.

இதையடுத்து, போலீசார் செங்கல்பட்டு அரசு குழந்தை நலக்காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சிறுமி சுவேதாவை மீட்டுச்சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும் சமீப காலமாக பல இடங்களில் அதிகரித்து வருகிறது. இதுபோன்றும் பொதுமக்கள் ஆதரவற்ற குழந்தைகளை பார்த்து எங்களுக்கு தகவல் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பவ இடத்துக்கு அவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவோம். குழந்தையை மீட்டு செல்ல யாரும் வரவில்லை என்றால் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோம். அப்படியும் வராவிட்டால் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அந்த குழந்தை அங்கேயே வளர்ந்து பருவம் அடையும் வரை அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்படும். இது அரசின் கடமை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: