வெங்கல், ஆர்.கே.பேட்டையில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

ஊத்துக்கோட்டை, ஜன.22: வெங்கல், ஆர்.கே.பேட்டையில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். பெரியபாளையம் அடுத்த வெங்கல் கிராமத்தில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் ஊராட்சி திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பாஸ்கர், பொருளாளர் முனுசாமி, துணை செயலாளர் டி.கே.முனிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் நாகலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தொமுச பேரவை செயலாளர் சண்முகம், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிபூண்டி கி.வேணு ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, பஸ் வசதி ஆகியவை இல்லை. அவற்றை செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்து 100க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர்.பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள வெள்ளாத்தூர், அம்மனேரி, ஆதிவராகபுரம், எரும்பி மற்றும் சகஸ்ரபத்மாபுரம் ஆகிய பகுதிகளில் திமுக ஊராட்சி கிராம சபை கூட்டம் நடந்தது.

இதற்கு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் எம்பியுமான தி.அ.முகமதுசகி தலைமை வகித்தார். ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.பழனி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர்கள் நாகப்பன், மூர்த்தி, பொன்னுரங்கம், சிவசங்கரன், கோடீஸ்வரி ஆகியோர் வரவேற்றனர். வேலூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சோளிங்கர் அசோகன் சிறப்புரையாற்றினார். இந்த ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகளை தெரிவித்ததுடன் மனுக்கள் கொடுத்தனர். இதில், மாவட்ட பொருளாளர் கே.சத்திராஜ், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மா.ரகு, சி.சுப்பிரமணி, பா.சம்பத், மகேந்திரன், சரத்குமார், ஏழுமலை, குணா, குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: